Polimer News
அரசியல்

விமான நிலையத்தில், தம்மை விமானத்தில் ஏறவிடாமல் அதிகாரிகள் தடுத்ததாக, அகிலேஷ் யாதவ் புகார்

லக்னோ விமான நிலையத்தில், தம்மை விமானத்தில் ஏறவிடாமல் தடுத்து வைத்ததாக, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தொடர்பான பதவியேற்பு நிகழ்ச்சிக்காக தாம் விமானத்தின் மூலம் செல்ல இருந்ததாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு செல்லாமல் தடுப்பதற்காக, தம்மை விமானத்தில் ஏறவிடாமல் அதிகாரிகள் விமான நிலையத்திலேயே தடுத்து வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

தமது ட்விட்டர் பக்கத்தில் அதுதொடர்பான புகைப்படங்களையும் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

image

இந்த விவகாரத்தை சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு இது உதாரணம் என கண்டனம் தெரிவித்துள்ள மாயாவதி, சமாஜ்வாதி-பகுஜன்சமாஜ் கூட்டணியை கண்டு மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகள் அஞ்சுவதாகக் கூறியுள்ளார்.

 

Related posts

Polimer News