Polimer News
மாவட்டம்

”சைடு டிஸ்” சரியில்லை எனக் கூறி மதுக்குடிப்பகத்தில் தகராறில் ஈடுபட்டவர் வெட்டிக் கொலை

மதுரையில் டாஸ்மாக் குடிப்பகத்தில் “சைடு டிஸ்” தகராறில் இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடிக்குளத்தைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகியோர் சர்வேயர் காலனியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்துக்கு நேற்றிரவு சென்றுள்ளனர்.

அப்போது சைடு டிஸ் சரியில்லை எனக் கூறி ஊழியர் தட்சிணாமூர்த்தி என்பவருடன் சிவா கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கு வந்த மர்மக்கும்பல், சிவாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.

கார்த்திக்குக்கும் வெட்டு விழுந்தது. இந்தக் கொலை சம்பவம் குறித்து தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Related posts

Polimer News