Polimer News
தமிழ்நாடு

விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் – முதலமைச்சர்

விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு இழப்பீடு அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் பொன்முடி சிறு, குறுவிவசாயிகள் பலருக்கு கடன்தள்ளுபடி செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வறட்சி காலத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக 2016 -17-ஆம் ஆண்டிலிருந்து, விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அந்த ஆண்டில் 16 கோடி ரூபாய் அளவுக்கும் 2017 – 18-ஆண்டில் 996 கோடி ரூபாயும் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

Related posts

Polimer News