Polimer News
இந்தியா

இந்திய விமானப்படையில் வரும் மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் இணைகின்றன

தேஜாஸ் எம்கே1 என்ற இலகு ரக போர் விமானங்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்திய விமானப்படையில் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டில்ஸ் லிமிடெட், தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நடுவானிலேயே எரிபொருள் நிரப்புவது, இலக்குகள் மீது துல்லியமாக குண்டுகள் வீசுவது, அதிநவீன ரேடார் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டது தேஜாஸ் போர் விமானம்.

ஆண்டுக்கு 8 விமானங்கள் என்பதற்குப் பதில் 16 விமானங்களை தயாரிக்க வசதியாக 1381 கோடி ரூபாயை 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கியது. தற்போது இயக்குவதற்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்ட்ட 16 விமானங்களில் 12 விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய 4 விமானங்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் இணைக்கப்படும் என்று பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ்பாம்ரே தெரிவித்தார்.

Related posts

Polimer News