Polimer News
மாவட்டம்

குழந்தை கடத்தலைத் தடுக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

குழந்தை கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கடலாடி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பவும், எம்.ஆர்.ஐ., இ.சி.ஜிக்கான உபகரணங்கள் வசதி ஏற்படுத்தி தர உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக் கருவிகள், காலிப்பணியிடங்கள், படுக்கை வசதிகள், அவசர ஊர்திகள், உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

நோயாளிகளை தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி, தவறான முறையில் கமிசன் பெறுவதாக எழுந்துள்ள புகார் குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சுகாதரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

 

Related posts

Polimer News