Polimer News
அரசியல்

திமுக எதையும் குறுகிய கண்ணோட்டத்தோடுதான் பார்க்கும் : ஜெயக்குமார்

தொழிலாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் நிதியினை பற்றி குறை கூறும் திமுக தனிமைப்பட்டுப்போகும் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொழிலாலாளர் துறை சார்பாக தொழில் நல்லுறவு விருது வழங்கும் விழா சென்னை சர். பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஜெயகுமார், நீலோஃபர் கபில் மற்றும் பென்ஜமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தொழிலாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் நிதியினை பற்றி குறை கூறும் திமுக, எதையும் குறுகிய கண்ணோட்டத்தோடுதான் பார்க்கும் என்றார்.

லோக் ஆயுக்தா தலைவரை நியமனம் செய்யும் தேடுதல் குழுவினை அமைத்து விட்டதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார்,விரைவில் இது தொடர்பான அடுத்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

Related posts

Polimer News