Polimer News
அரசியல்

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏவிடம் எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆளும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான நாகன கவுடாவை இழுக்க அவரது மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் என்று முதலில் மறுப்பு தெரிவித்த எடியூரப்பா, பின்னர் அதில் இருப்பது தனது குரல்தான் என ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமியிடம், சபாநாயகர் ரமேஷ்குமார் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் குமாராசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

Polimer News