Polimer News
சென்னை

டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மீது லஞ்சப் புகார், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல்

சென்னையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கில் டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய மேலாளராக முத்துகுமாரசாமி இருந்து வருகிறார்.

இவர், அதிகாரிகள் நியமனம், பணி மாறுதல், பார் லீஸ் ஆகியவற்றுக்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டி.எஸ்.பி சங்கர் தலைமையில் நடைபெற்று வரும் இந்தச் சோதனையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து முத்துகுமாரசாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Related posts

Polimer News