Polimer News
தமிழ்நாடு

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக் உள்ளிட்ட மரங்களை அகற்ற ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக வனங்களில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்ற ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த வகை மரங்கள் நிலத்தடி நீரை முழுமையாக உறிஞ்சுவதால் மலைப்பகுதியில் 60 முதல் 70 சதவீத மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், குழு 2 மாதங்களுக்குள் பரிந்துரை அளிக்கவும், அதன் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். 

Related posts

Polimer News