Polimer News
மாவட்டம்

கரூரில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற -எம்.ஆர் விஜயபாஸ்கர்

கரூரில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கத்தை வழங்கினார்.

அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரத்து 580 பயனாளிகளுக்கு 3 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வழங்கிய அமைச்சர், 6 கோடி ரூபாய் மதிப்பில் நிதியுதவியும் வழங்கினார்.

 

Related posts

Polimer News