Polimer News
மாவட்டம்

500 சவரன் நகைகள், ரூ. 8 லட்சம் கொள்ளை என விறகுமண்டி உரிமையாளர் புகார்

மதுரையில் 500 சவரன் நகைகள், 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்தவரிடமே சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த விறகுமண்டி உரிமையாளரான தங்கவேலு அளித்த புகாரில் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியதாகவும், அப்போது வீட்டின் முன்பக்க கதவுப் பூட்டு  உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 500 சவரன் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்த போலீசார் கொள்ளைக்கான அறிகுறி ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். நகைகள் மற்றும் பணத்துக்கான ஆவணங்களை கேட்டுள்ள போலீசார் கொள்ளையா, நாடகமா என விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related posts

Polimer News