Polimer News
மாவட்டம்

கஜா புயலால் அடித்துச் செல்லப்பட்ட மரப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கஜா புயலால் அடித்துச் செல்லப்பட்ட மரப்பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பிரதாப ராமபுரம் ஊராட்சியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மரப் பாலம்,கஜா புயலால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், பிரதாப ராமபுரம் மக்கள் நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

  பெற்றோர் தோளில் பிள்ளைகளை சுமந்து ஆற்றைக் கடந்து வந்தனர். இது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, மரப்பாலம் அமைக்க ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்  வழங்க மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அங்கு பாலம் சீரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

Related posts

Polimer News