Polimer News
சென்னை

நம்ம சென்னை செயலியில் சொத்து வரி செலுத்தும் முறை அறிமுகம்

நம்ம சென்னை செயலியில் சொத்து வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திக்குறிப்பில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஃபோன்களில் பதிவிறக்கம் செய்யும் வகையிலான ‘நம்ம சென்னை’ செயலியை இதுவரை 48 ஆயிரத்து 212 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், தொழில்வரி மற்றும் வர்த்தக உரிமம் உள்ளிட்ட சேவைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது இச்செயலி மூலம் பெறப்பட்ட 18 ஆயிரத்து 735 புகார்களில் 18 ஆயிரத்து 528 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெட்பேங்கிங், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எஃப்.டி., யூ.பி.ஐ. ஆகிய முறைகளில் சொத்து வரி செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Polimer News