Polimer News
மாவட்டம்

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில், ரூ.7கோடிக்கு ஆடுகள் விற்பனை

கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில், பொங்கலை முன்னிட்டு 7கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
வரும் செவ்வாய் அன்று பொங்கல் பண்டிகை என்பதால் விற்பனை அதிகரித்துள்ளது.

சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 4 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை, எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையாகின. மொத்தமாக, 7கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1 கோடி ரூபாய் அதிக விற்பனை ஆகும்.

Related posts

Polimer News