Polimer News
சென்னை

காவலரை கடத்திச் சென்று தாக்கி வாக்கி டாக்கி பறிப்பு

சென்னை அடுத்த மாதவரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கி வாக்கி டாக்கியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாதவரம் பால் பண்னை காவல்நிலைய காவலர் கருப்பசாமி புதன் கிழமை இரவு ஆவின் பாலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்த போது, ஆட்டோவில் வந்த 3 பேரும் குடிபோதையில் இருந்தனர்.

உரிய ஆவணங்களும் இல்லை என்பதால் அவர்களது ஆட்டோவிலேயே ஏறிய காவலர் கருப்பசாமி காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். குடிபோதையில் இருந்த மூவரும் காவல் நிலையத்திற்கு செல்லாமல் வேறொரு பகுதிக்கு ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்று காவலரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்து கூடாது என்பதற்காக அவரை தாக்கி வாக்கி டாக்கியையும் பிடிங்கி கொண்டு, கீழே தள்ளிவிட்டு சென்றனர். காயத்துடன் அங்கிருந்து தப்பி காவல் நிலையம் வந்த கருப்பசாமி கொடுத்த தகவலை அடுத்து, ஆட்டோ பதிவெண்ணை வைத்து போதை ஆசாமிகளை பிடித்தனர்.

மாதவரம் பகுதியியைச் சேர்ந்த மணிகண்டன், பிரேம்குமார் மற்றும் மணலி வீச்சூரை சேர்ந்த தினகரன் ஆகிய மூவரையும் கைது செய்து வாக்கி டாக்கியையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். 

Related posts

Polimer News