Polimer News
மாவட்டம்

15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதற்கு காரணமான 4 இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

வடகோவனூரைச் சேர்ந்த அந்தச் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த தாஸ், விஜய், அஜீத், முருகேஷ் ஆகிய நான்கு இளைஞர்கள், வீடு புகுந்து அடித்து துன்புறுத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பெற்றோர் கண்முன்னே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தாஸ், விஜய், அஜீத், முருகேஷ் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

Polimer News