Polimer News
இந்தியா

ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் கடத்தல்

கேரள மாநிலம் திருச்சூரில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

எர்ணாகுளம் – பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மாநில கலால் துறையினரும், ரயில்வே பதுகாப்புப் படையினரும் இணைந்து ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பார்சல்களுக்கான பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மூட்டைகளில் இருந்து 316 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து திருச்சூர் கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

Polimer News