Polimer News
கல்வி

புதிய மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை, இணையதளத்தில் உடனுக்குடன் பதிவுவேற்ற உத்தரவு

புதிய மாணவர்கள் சேர்க்கை, வேறு பள்ளிக்கு மாணவர்கள் மாறுதல் உள்ளிட்ட விவரங்களை, அனைத்து பள்ளிகளும், எம்மிஸ்(EMIS) எனப்படும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவுவேற்றுமாறு, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் அன்றாட பணிகள் பற்றிய விவரங்கள் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2019 – 2020ஆம் கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கையும், தொடங்கி நடைபெற்று வருவதால், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்.

புதிய மாணவர்கள் சேர்க்கை, வேறு பள்ளிக்கு மாணவர்கள் மாறுதல் உள்ளிட்ட விவரங்களை, முறையாக பதிவேற்றாத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீதும், உரிய முறையில் கண்காணிக்காத கல்வி அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related posts

Polimer News