Polimer News
சற்றுமுன் சினிமா முக்கிய செய்தி

பிஎம் மோடி படத்தை பார்த்துவிட்டு தடையை தொடர்வது குறித்து முடிவெடுக்கலாம்

பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை பார்த்து விட்டு அதன் மீதான தடை குறித்து முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையை தழுவிய இப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் தள்ளுபடியான நிலையில், இப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் படக்குழு வழக்கு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள், படத்தை பார்த்து விட்டு அதன் மீதான தடை பற்றி முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்த விளக்கத்தை, ஏப்ரல் 22ஆம் தேதிக்குள்ளாக மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related posts

Polimer News