கொலராடோ பல்கலைக்கழகம் அருகே பரவிய காட்டுத் தீ-500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் கொலராடோ ((colorado)) மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமான பொதுமக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பவுல்டர் மலைப்பேரதேசத்தில் கொலராடோ பல்கலைக்கழகத்திற்கு அருகே சுமார் 62 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவியது. விமானங்கள் மூலமாகவும், நேரடியாக சம்பவ பகுதிக்கு சென்றும் தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *