கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாக். வீரர்கள்-நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை

சூதாட்டப்புகாரில் சிக்கியுள்ள 5 கிரிக்கெட் வீரர்களை நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அந்நாட்டில் அண்மையில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளின்போது, வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் முகம்மது இர்பான், ஷார்ஜில், காலித் லத்தீப், நாசிர் ஜாம்ஷெத், ஷாசாயிப் ஹசன் ((Mohammad Irfan, Sharjeel Khan, Khalid Latif, Nasir Jamshed, and Shahzaib Hasan)) ஆகிய 5 பேரை இடைநீக்கம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு மேலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கருத்துகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவகையில், நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து பாகிதான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *