ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுகிறது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனைவிட்டு வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை வருகிற 29-ஆம் தேதி தொடங்கும் என்று பிரிட்டன் தூதர் டிம் பாரோ தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதியில் யூனியனைவிட்டு வெளியேறும் நடவடிக்கை தொடங்கும் என பிரதமர் தெரசா மே தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர் டோனால்ட் டஸ்க்கை சந்தித்த டிம் பாரோ அளித்துள்ள கடிதத்தில், பிரெக்சிட் பேச்சுவார்த்தையை 29ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடைமுறைகளை ஐரோப்பிய யூனியன் உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வெளியேற்ற நடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனின் கூட்டுப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து விலகி, மீண்டும் தனி நாடாகச் செயல்பட பிரிட்டனில் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

4 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *