Polimer News
சென்னை

இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் என புகார்

சென்னையில் இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அமமுக கட்சியைச் சேர்ந்த இருவரை அதிமுகவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் இரவில் விடு விடாக சென்று அமமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அ.தி.மு.க.வினர் அங்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா 200 ரூபாய் வீதம் கொடுத்ததாகவும், அமமுகவை சேர்ந்த பாபு மற்றும் குமார் ஆகிய 2 பேரையும் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இருவர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பாக அமமுகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related posts

Polimer News