​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைத் தேர்தலுக்காக வாட்ஸ் அப்பில் நடைபெறும் விதிமீறல்கள்

Published : May 15, 2019 9:34 PM

மக்களவைத் தேர்தலுக்காக வாட்ஸ் அப்பில் நடைபெறும் விதிமீறல்கள்

May 15, 2019 9:34 PM

இந்தியாவில் தேர்தலை ஒட்டி வாட்ஸ் அப் கட்டுபாடுகள் மீறப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 1000 ரூபாய் மதிப்பிலான மென்பொருட்கள் இந்தியாவில் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மென்பொருட்களை பயன்படுத்தினால் செய்திகளை அனுப்ப வாட்ஸ் அப் விதித்துள்ள கட்டுபாடுகளை எளிதாக கடந்து எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே செய்திகளை அனுப்ப முடியுமென்ற வாட்ஸ் அப் கட்டுப்பாடுகளை மீறி, ஒரு லட்சம் பேருக்கு கூட செய்திகளை வட இந்தியாவில் சிலர் அனுப்பி வருவதாக கூறியுள்ள ராய்ட்டர்ஸ், இதற்காக 7999 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்திற்காக இது போல செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோரின் செல்போன் எண்கள் முடக்கப்படுமென வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ள போதிலும், இந்திய அரசியல்கட்சிகள் இதனை பொருட்படுத்துவதில்லை என்றும் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.