​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்ய புதிய கட்டுப்பாடு

Published : May 15, 2019 9:17 PM

மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்ய புதிய கட்டுப்பாடு

May 15, 2019 9:17 PM

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாளுக்கு முன்னதாகவே பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், மேற்கு வங்க மாநிலத்தின் டம் டம், பாராசாட், டைமண்ட் ஹார்பர், ஜெய்நகர், மதுராபூர், ஜாதவ்பூர், பாசிர்காட், தெற்கு, வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் வருகிற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த 9 தொகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு 10 மணியோடு பிரசாரம் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் தேர்தல் முடியும் வரை யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அங்கு 17-ஆம் தேதி வரை பிரசாரம் நடத்த அனுமதி இருந்த நிலையில் பா.ஜ.க. - திரிணாமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 324 வது சட்டப்பிரிவின் படி முதல் முறையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.