​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமமுக பிரமுகர்

Published : May 15, 2019 8:03 PM

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமமுக பிரமுகர்

May 15, 2019 8:03 PM

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமமுக பிரமுகர் தனது பிறந்தநாளை பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த கண்டவராயன்பட்டியை சேர்ந்த கார்த்தி என்கிற பையா கார்த்தி என்ற இளைஞர் அமமுக பிரமுகராக உள்ளார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மணல் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி, தனது பிறந்தநாளை வீட்டில் ஆதரவாளர்கள் புடை சூழ நீண்ட பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பையா கார்த்தி கொண்டாடியுள்ளார்.

இந்த வீடியோ காட்சியை கைப்பற்றியுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.