​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் இருதினங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Published : Mar 15, 2019 1:31 PM

தமிழகத்தில் இருதினங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Mar 15, 2019 1:31 PM

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும், ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மறுதினம் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட தகுந்த அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.