​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநாவுக்கரசை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு

Published : Mar 15, 2019 1:23 PM

திருநாவுக்கரசை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு

Mar 15, 2019 1:23 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

நேற்றைய தினம், பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீசார் நான்கரை மணி நேரம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆதாரங்கள், தடயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திருநாவுக்கரசு வீட்டிலிருந்த லேப்டாப், கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஏற்கனவே உபயோகித்த செல்போன் மெமரி கார்டுகள் உள்ளிட்டவற்றை தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய சிபிசிஐடி போலீசார், பின்னர் அவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.