​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரவை இயந்திரத்தில் அரைத்து தூளாக்கப்பட்ட ஐபோன்

Published : Mar 15, 2019 12:45 PM

அரவை இயந்திரத்தில் அரைத்து தூளாக்கப்பட்ட ஐபோன்

Mar 15, 2019 12:45 PM

இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஐபோனை அரவை இயந்திரத்தில் போட்டு அதன் வேதியியல் மூலக்கூறுகளைக் ஆய்வு செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

உலகில் பலரது அன்றாட வாழ்வில் இன்றியமையாததாக மாறி வரும் செல்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால், அதன் திரைக்குப் பின்னால் என்ன உள்ளது? என்பதை எத்தனை பேர் சிந்தித்துள்ளீர்கள்? என்ற கேள்வியுடன் பிளைமவுத் பல்கலைக்கழகம் தனது டிவிட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

அதில் போதிய பாதுகாப்பு கவசங்களை அணிந்த ஆய்வாளர்கள் ஐபோன் ஒன்றை அரவை இயந்திரமான பிளெண்டரில் போட்டு அரைக்கின்றனர்.


இதில், 33 கிராம் இரும்பு, 13 கிராம் சிலிகான், 7 கிராம் குரோமியம், 90 மில்லி கிராம் வெள்ளி, 36 மில்லி கிராம் தங்கம் உள்ளது.

மேலும் 900 மில்லி கிராம் டங்ஸ்டன், 70 மில்லி கிராம் கோபால்ட் உள்ளிட்டவையும் இருப்பதாக, பல்வேறு வேதியியல் சோதனைகளுக்குப் பின் தனித்தனியாகப் பிரித்து கண்டறியப்பட்டுள்ளதாக பிளைமவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கனிமங்கள் வீணாவதைத் தடுக்க மறுசுழற்சியின் அவசியத்தையும் அவர்கள் இதன்மூலம் வலியுறுத்தியுள்ளனர்.