​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழாவுக்கு சிறப்பு ஏற்பாடு

Published : Feb 11, 2019 7:00 PM

திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழாவுக்கு சிறப்பு ஏற்பாடு

Feb 11, 2019 7:00 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  செவ்வாய்க்கிழமை நடைபெறும் ரத சப்தமி விழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர். அந்த கோவிலில்  செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்கள் வீதி உலா நடக்கிறது. அனைத்து வாகனங்களிலும் ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார். வாகன வீதிஉலாவை ஒட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கோவிலின் நான்கு மாடவீதிகளில் 175 கேலரிகளும் சீரமைத்து, தூய்மையாக வைக்கப்பட்டுள்ளன.  மாடவீதிகளில் 55 உணவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  வாகன வீதிஉலாவுக்கு முன்னால்  கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடக்கின்றன.