​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளைஞர் மர்ம மரணம் விவகாரத்தில் உடலை வாங்கிச் செல்லுமாறு போலீசார் கட்டாயப்படுத்துவதாக புகார்

Published : Feb 11, 2019 6:57 PM

இளைஞர் மர்ம மரணம் விவகாரத்தில் உடலை வாங்கிச் செல்லுமாறு போலீசார் கட்டாயப்படுத்துவதாக புகார்

Feb 11, 2019 6:57 PM

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தனியார் லாட்ஜில் காதலியுடன் இருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், இளைஞரின் உடலை வாங்கச் சொல்லி போலீசார் கட்டாயப்படுத்துவதாக அவரது தாயார் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2ஆம் தேதி குற்றாலத்திலுள்ள முருகவிலாஸ் தங்கும் விடுதியில் காதலியுடன் தங்கியிருந்த கார்த்திக்ராஜா என்ற இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த கார்த்திக்ராஜாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என போலீசார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், உடலை வந்து வாங்கிச் செல்லுமாறும் வாங்கிச் செல்லாவிட்டால் தாங்களே அடக்கம் செய்துவிடுவோம் என போலீசார் மிரட்டுவதாகவும் இளைஞரின் தாயார் கோட்டாட்சியரிடம் புகாரளித்துள்ளார்.