​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலை கோவிலில் மாசிமாத பூஜைக்காக நடைதிறப்பு, 3000 போலீசார் பாதுகாப்பு

Published : Feb 11, 2019 6:25 PM

சபரிமலை கோவிலில் மாசிமாத பூஜைக்காக நடைதிறப்பு, 3000 போலீசார் பாதுகாப்பு

Feb 11, 2019 6:25 PM

மாசிமாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதை ஒட்டி சபரிமலை கோவிலில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அந்த கோவிலில் மாசிமாத பூஜைக்காக 12-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 17-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

மாசி மாத பூஜையின் போதும் சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதைத் தொடர்ந்து 3 எஸ்.பி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சன்னிதானத்தில் எஸ்.பி. அஜீத் தலைமையிலும், பம்பையில் எஸ்.பி. மஞ்சு நாத் தலைமையிலும், நிலக்கல்லில் எஸ்.பி. மது தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.