​​ பேட்ட, விசுவாசம் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் என புகார், ஆய்வு செய்ய அதிகாரிகள், வழக்கறிஞர்கள் குழுக்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேட்ட, விசுவாசம் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் என புகார், ஆய்வு செய்ய அதிகாரிகள், வழக்கறிஞர்கள் குழுக்கள்

Published : Jan 11, 2019 8:33 PM

பேட்ட, விசுவாசம் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் என புகார், ஆய்வு செய்ய அதிகாரிகள், வழக்கறிஞர்கள் குழுக்கள்

Jan 11, 2019 8:33 PM

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விசுவாசம் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் கொண்ட குழுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்துள்ளது.

சர்க்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பேட்ட, விசுவாசம் படங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் படங்கள் திரையிடப்பட்டுள்ள 22 திரையரங்குளில் ஆய்வு செய்ய ஒரு தியேட்டருக்கு 3 பேர் வீதம் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்தக் குழுவினர் ஜனவரி 17 வரை தொடர்புடைய திரையரங்குகளில் நேரில் ஆய்வு நடத்தவும் 18-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.