​​ ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் ஓ.பி.எஸ்.,க்கு சம்மன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் ஓ.பி.எஸ்.,க்கு சம்மன்

Published : Jan 11, 2019 7:10 PM

ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் ஓ.பி.எஸ்.,க்கு சம்மன்

Jan 11, 2019 7:10 PM

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி ஆஜராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், 20-ஆம் தேதி ஆஜராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. பல்வேறு காரணங்களால் விசாரணை தள்ளிப்போன நிலையில் வெள்ளியன்று மீண்டும் ஆஜராக அவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் 21-ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு வரும் 22-ஆம் தேதிக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரும் 23-ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.