​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் தேரோட்ட நிகழ்வு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் பங்கேற்பு

Published : Jan 11, 2019 6:56 PM

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் தேரோட்ட நிகழ்வு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் பங்கேற்பு

Jan 11, 2019 6:56 PM

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கோவில் தேரோட்டத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.

கருப்பணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி. கருப்பணன் ஆகியோர் தேரின் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.