​​ நாட்டில் தனிநபரின் சொத்து மதிப்பு 14 விழுக்காடு வரை அதிகரிப்பு என ஆய்வு நிறுவனம் அறிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டில் தனிநபரின் சொத்து மதிப்பு 14 விழுக்காடு வரை அதிகரிப்பு என ஆய்வு நிறுவனம் அறிக்கை

Published : Dec 06, 2018 9:49 PM

நாட்டில் தனிநபரின் சொத்து மதிப்பு 14 விழுக்காடு வரை அதிகரிப்பு என ஆய்வு நிறுவனம் அறிக்கை

Dec 06, 2018 9:49 PM

இந்தியர்களின், தனிநபரது சொத்து மதிப்பு, நடப்பு நிதியாண்டில், 14 விழுக்காடு வரையில் அதிகரித்திருப்பதாக, KPW என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கார்வி குழுமத்தின் ஓர் அங்கமாக இயங்கும் KPW, இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது.

இதில், ரொக்கம் கையிருப்பு, வங்கி டெபாசிட், பங்கு பத்திரங்கள் உள்ளிட்ட நிதிசார் சொத்துகள் 17 புள்ளி 42 விழுக்காடு வரையிலும், வீடுகள், கட்டிடங்கள் ஆகியனவற்றின் மீதான முதலீட்டின் மூலமாக கிடைக்கப்பெறும் சொத்துக்களின் மதிப்பு 9 புள்ளி 24 விழுக்காடு வரையிலும் அதிகரித்திருப்பதாக, கார்வி ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இவற்றின் சராசரி குறியீடாக, நாட்டின் தனிநபர்களின் சொத்து மதிப்பு 14 விழுக்காடு வரையில் அதிகரித்திருப்பதாக கார்வி ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.