​​ அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கை 3 ஆண்டுகளுக்குள் எட்ட மத்திய அரசு தீவிரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கை 3 ஆண்டுகளுக்குள் எட்ட மத்திய அரசு தீவிரம்

Published : Dec 06, 2018 9:45 PM

அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கை 3 ஆண்டுகளுக்குள் எட்ட மத்திய அரசு தீவிரம்

Dec 06, 2018 9:45 PM

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளைக்கட்டி முடிக்கும் இலக்கை 3 ஆண்டுகளுக்குள் எட்ட மத்திய அரசு மேலும் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டுக்குள் மலிவு விலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட 63 லட்சம் வீடுகளில் 12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 23 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 75 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் 30 லட்சம் வீடுகளை கட்டி முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.