​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிறிஸ்டியன் மைக்கேலைக் காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி- பா.ஜ.க.

Published : Dec 06, 2018 9:24 PM

கிறிஸ்டியன் மைக்கேலைக் காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி- பா.ஜ.க.

Dec 06, 2018 9:24 PM

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

மைக்கேல் கைதால் காங்கிரஸ் குடும்பத்தார் உறக்கமின்றி தவிப்பதாகவும், கதி கலங்கி நிற்பதாகவும் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.

மைக்கேலைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு குழுவை அனுப்பி இருப்பதாகவும், காங்கிரசைச் சேர்ந்த அல்ஜோ கே ஜோசப் (Aljo K Joseph ) வாதிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மைக்கேலுக்காக வாதாட முடியுமா என்று சிலர் தன்னைக் கேட்டுக் கொண்டதாக ஜோசப் கூறியதை சுட்டிக் காட்டியுள்ள சம்பித் பத்ரா, யாரோ என்று அவர் கூறியது காங்கிரசில் உள்ள இருவரைத் தான் என்றும் விமர்சித்தார்.