​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் 3 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 72 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்கள் பயன்பெறும் வகையில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு...

புதுவை கல்லூரிகளில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக வழக்கு

கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தொகையை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என புதுச்சேரி கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மாணவர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய...

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா ?

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா என அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் அரசின் ஒவ்வொரு முடிவையும் எதிர்த்து வழக்கு தொடர்வதை ஆசிரியர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி....

துணை நிலை ஆளுநரின் அதிகாரம் குறித்த கிரண்பேடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுச்சேரி அரசின் அன்றாட நிர்வாகங்களில் தலையிடும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரம் உள்ளதாக மத்திய உள்துறை...

கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுப்பு

சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஓடும் ஆறுகளான...

காயிதே மில்லத் கல்லூரி 30 ஏக்கர் வனத்துறை நிலத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி 30 ஏக்கர் வனத்துறை நிலத்தை அரசிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40 ஏக்கர் வனத்துறை நிலம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காயிதேமில்லத் கல்லூரிக்கு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2001-ஆம் ஆண்டு கல்லூரி பயன்படுத்திய...

குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் -1 தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை எனப் புகார் எழுந்ததையடுத்து தேர்வை ரத்து செய்யக்கோரி...

ஓய்வுபெற்ற விஏஓக்களை மறு நியமனம் செய்யும் அரசாணையை எதிர்த்து வழக்கு

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறு நியமனம் செய்யும் அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் 2...

6 மாதம் பரோல் கோரும் வழக்கில், தானே வாதாட நளினிக்கு நீதிபதிகள் அனுமதி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி 6 மாதம் பரோல் கோரும் வழக்கில், தானே வாதாட வேலூர் சிறையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாத பரோல் கோரி உயர்நீதிமன்றத்தில்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து டிக்டாக் வழக்கை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டிக்டாக் செயலியைத் தடை செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டிக்டாக் செயலியால் கலாச்சார சீர்கேடுகள், விபரீதங்கள் நடப்பதாகக் கூறி அதைத் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக...