​​
Polimer News
Polimer News Tamil.

சிவகங்கை மாவட்டத்தில் ரயில் நிலைய பலகைகளில் இந்தி மொழியை அழித்ததாக ஒருவர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் ரயில் நிலைய பலகைகளில் இந்தி மொழியை அழித்ததாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்குடி, கோட்டையூர் ஆகிய ரயில் நிலையங்களில், பெயர்ப்பலகையில் இந்தியில் இருந்த எழுத்துக்கள் கடந்த 18-ஆம் தேதி கருப்பு மை பூசி அழிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து காரைக்குடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு...

வைர வியாபாரி நீரவ் மோடிக்கு எதிராக ஹாங்காங் நீதிமன்றத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு

நிதி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு எதிராக, ஹாங்காங் நீதிமன்றத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்குள்ள நீரவ் மோடியின் சொத்துக்களை முடக்கி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. நீரவ் மோடி மற்றும் முகுல் சோஸ்கிக்கு...

கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதி வெளியீடு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதியைத் தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். இரண்டாம் நிலைக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கூட்டுறவுச் சங்கங்களுக்கு போட்டியிடுவோர் எண்ணிக்கை...

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் போலீசார் சோதனை - நிர்மலாதேவிக்கு உதவிய இரண்டு பேருக்கு வலைவீச்சு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய நிலையில், அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்றது.மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய...

பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்காக இனி ஆஜராவதில்லை - இந்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் வழக்கறிஞர்கள், பாலியல் கொடுமைக் குற்றவாளிகள் யாருக்காகவும் இனி நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.  இந்தூரில் பலூன்கள் விற்று பிழைப்பு நடத்தி வரும் ஏழைப் பெற்றோரின் 4 மாதமே ஆன குழந்தையை, சுனில் பீல் என்பவன் கடத்திச்...

காவல் ஆய்வாளர் பணி இடமாற்றத்தை வெடிகள் கொளுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடிய பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் காவல் ஆய்வாளர் இடமாற்றப்பட்டதைப் பொதுமக்களில் சிலர் வெடி கொளுத்தியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர். பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளராக 3ஆண்டுகளாகப் பணிபுரிந்த ராஜா பணம் பெற்றுக்கொண்டு பொய்வழக்குப் போடுவது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் பணம் பெறுவது, மாட்டு வண்டிக்காரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு...

நடிகர்களின் சம்பளத்தில் வெளிப்படைத்தன்மை உள்பட படத்தயாரிப்பில் செலவுகளைக் குறைப்பது குறித்து நடிகர் சங்கத்தினர் ஆலோசனை

நடிகர்களின் சம்பளத்தில் வெளிப்படைத்தன்மை உள்பட படத்தயாரிப்பில் செலவுகளைக் குறைப்பது குறித்து நடிகர் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, சுகாசினி உள்ளிட்டோர்...

உரிய நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வராததால் இருவர் உயிரிழப்பு

ராமேஸ்வரம் அருகே விபத்தில் சிக்கிய இருவர், 108 ஆம்புலன்ஸ் வராததன் காரணமாக பலியானதால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தேவிபட்டினத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில், ஆர்.காவலூரைச் சேர்ந்த சுரேஷ், 13 வயது சிறுவன் ஆனந்த் ஆகியோர் படுகாயமுற்றனர். அங்கிருந்தவர்கள் 108...

உரிமையாளர்களை வெளியே அனுப்பி 2 கடைகளில் நூதன கொள்ளை

ராமநாதபுரத்தில் 2 கடைகளில் நூதன முறையில் உரிமையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, கல்லாப்பெட்டியை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  கடந்த வியானன்று சக்கரைக்கோட்டையில் உள்ள மரியா கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்துள்ளனர். உரிமையாளர் சுந்தரவேலிடம், பெட்ரோல் பங்க்கின்...

செலவீனம், போட்டியை சமாளிப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கையில் செல்போன் நிறுவனங்கள்

மைக்ரோமேக்ஸ், லாவா, இண்டெக்ஸ் போன்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனைப் பிரிவு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்துள்ளன. செலவீனங்களைக் குறைப்பதற்காக மறைமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்வதென ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கார்பன், விவோ, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்கள்,...