​​
Polimer News
Polimer News Tamil.

கழிவறைகளில் பயன்படுத்தப்படும் Hand Dryer கிருமிகளின் கூடாரம் என எச்சரிக்கை

கழிவறைகளில் பயன்படுத்தப்படும் ஹேண்ட் ட்ரையர்கள் கிருமிகளின் கூடாரம் என அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. கழிவறையில் உள்ள கிருமிகளுடன் கூடிய காற்றை உறிஞ்சி, அதை சூடான காற்றோடு தானியங்கி கை உலர்த்தும் இயந்திரம் வெளியிடுவதாக யுகான்’ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசன்...

ஓசூரில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி போரட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஒசூரில் இருந்து கர்நாடகா நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்...

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் நாளை வரை தென் தமிழக மீனவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.  நேற்று குமரிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த...

சிரியா மீது ஏவுகணைகளை வீசி அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தாக்குதல்

அமெரிக்கா ராணுவ கூட்டுப் படைகள் சிரியா மீது வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.  சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான உள்நாட்டு போரில், அவருக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் நாடுகளும், அவருக்கு எதிராக...

விளம்பரம் தேடவும், கட்சியை அடையாளப்படுத்தவும் சிலர் போராட்டம் : அமைச்சர் R.B.உதயகுமார்

விளம்பரம் தேடுவதற்காகவும், தங்களது கட்சிகளை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவுமே சிலர் காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்தி வருவதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க...

7 முட்டை கக்கிவிட்டு மக்களிடம் இருந்து தப்பிய நாகப்பாம்பு

கேரளாவில் மனிதர்களிடம் சிக்கிய நாகப்பாம்பு ஒன்று, தான் விழுங்கிய 7 கோழி முட்டைகளை கக்கிவிட்டு தப்பிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிறது. வயநாடு பகுதியில் பண்ணைப் பகுதி வீடு ஒன்றில் இருந்த கோழிக்கூட்டுக்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்று, கோழியை கொன்றுவிட்டு, அது அடைக்காத்துக் கொண்டிருந்த...

எப்போதும் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை - தங்கமணி

கோடை காலத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். மக்களைத் தேடி எல்.இ.டி. விளக்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் அமைச்சர்...

பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து

பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகள் அனைத்தும் ஈடேற வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். தமது...

சிறுமி ஆசிபா பற்றி பேஸ்புக்கில் மனிதத்தன்மையற்ற கருத்து பதிவிட்ட வங்கி ஊழியர் நீக்கம்

கதுவா சிறுமி ஆசிபா பானு குறித்து பேஸ்புக்கில் மனிதத் தன்மையற்ற கருத்தைப் பதிவிட்டிருந்த  ஊழியரைக் கோட்டக் மகிந்திரா வங்கி பணியில் இருந்து நீக்கியுள்ளது. ஜம்மு கதுவாவில் 8வயதுச் சிறுமி பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது...

கன மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 மாத பெண்குழந்தை உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், தச்சநல்லூரில் மழையின்போது மேற்கூரை இடிந்துவிழுந்ததால் 6 மாத பெண்குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது.  நேற்றிரவு பெய்த பலத்த மழையில், நெல்லை சந்திப்பை அடுத்த தச்சநல்லூரில் வீட்டின் மேற்கூரை...