​​
Polimer News
Polimer News Tamil.

ரஷ்யாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 48 பேர் பலி

ரஷ்யாவின் கெமெரோவோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்தது. கெமெரோவா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள விண்ட்டர் செர்ரி என்ற வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருப்பதால் ஏராளமானோர் குழந்தைகளுடன் சென்றிருந்தனர். இந்த நிலையில்,...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தித் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் காற்று மாசுபட்டு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆலையை விரிவாக்க...

பெண்கள் ஆண்நண்பர்களை வைத்துக் கொள்வதால் தான் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகுவதாக மத்தியப் பிரதேச பா.ஜ.க. MLA பேச்சு

பெண்கள் ஆண்நண்பர்களை வைத்துக் கொள்வதால் தான் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகுவதாக மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பன்னாலால் ஷாக்யா கூறியுள்ளார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய குணா தொகுதி எம்.எல்.ஏ.வான பன்னாலால், பெண்கள் ஆண்நண்பர்களை வைத்துக் கொள்வது ஏன்...

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு - நெடுஞ்சாலைகளில் மட்டும் 60% பேர் பலி

இந்தியாவின் சாலை விபத்துகளில் இறப்போரில் சுமார் 60 சதவீதம் பேர் நெடுஞ்சாலைகளில் மட்டுமே உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் அதிகரிக்கும் சாலை விபத்துகள் தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் ஒன்றரை...

ஓசூர் அருகே பைப்லைன் பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் உதவியுடன் பொதுமக்கள் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாய பைப்லைன் பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். நேற்றிரவு சாணமாவு வனப்பக்குதியிலிருந்து உணவுக்காக வெளியேறிய காட்டு யானைகள் நாயகணபள்ளி அருகே வந்த போது, கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை, விவசாயத்திற்கு பைப்...

திருத்துறைப்பூண்டி அருகே இரண்டாவது மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இரண்டாவது மனைவியை வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். எழிலூரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் சத்தியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில்,...

நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவிலை அடுத்த கோட்டாரைச் சேர்ந்த அய்யாவு என்பவரின் மனைவி நித்யா. இவர் வயிற்று வலி காரணமாக கோட்டாறில் உள்ள...

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டாங்கர் லாரி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் டாங்கர் லாரி ஒன்று பெட்ரோலை பங்க்கில் நிரப்பிக்கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்தது. நேற்று நரசிங்பூரில் ((Narsinghpur)) லாரி தீப்பற்றி எரிந்த காட்சிகளை அந்த வழியாகச் சென்றவர்கள் செல்ஃபோனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். லாரியில் தீப்பற்றியததையடுத்து பெரும் தீவிபத்தைத்...

புதுச்சேரி சட்டமன்றத்திற்குள் நுழைய முயன்ற பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் தடுத்து நிறுத்தம்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற, நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் 3 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளே அனுமதிக்க வலியுறுத்தி 3 பேரும் சட்டப்பேரவை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. முன்னதாக, காலை...

இந்திரா காந்தி நினைவு பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் துலீப் மலர்கள்

ஜம்மு-காஷ்மீரில் இந்திரா காந்தி நினைவு பூங்காவில் பூத்துள்ள பல வண்ண துலீப் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தால் ஏரியின் அருகே 30 எக்டர் பரப்பளவில் இந்திராகாந்தி நினைவு துலீப் மலர் பூங்கா அமைந்துள்ளது. இந்த...