​​
Polimer News
Polimer News Tamil.

சர்வதேச தரப்பட்டியலில் இந்தியாவின் 6 உயர்தொழில்நுட்ப கல்வி மையங்கள்

பல்கலைக் கழகங்களுக்கான சர்வதேச தரப்பட்டியலின் முதல் 400 இடங்களில், இந்தியாவின் 6 உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. QS என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியலில், இந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் உள்ள 5 ஐஐடி நிறுவனங்கள்...

நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி உண்ணாவிரதம் நடத்த அறப்போர் இயக்கத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் 2012 -2016 காலக்கட்டத்தில் ஊழல் நடைபெற்றது குறித்து விசாரிக்கக் கோரி உண்ணாவிரதம் நடத்த அறப்போர் இயக்கத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்...

தருமபுரி அருகே காவல்நிலையம் முன்பாக இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல் நிலையம் முன்பாக இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். புகாரை காவல்துறையினர் பெறாததால் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.  ஏரியூரை அடுத்த மஞ்சப்பட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். தனது மனைவியை தன்னுடன்...

சங்கர மடத்தின் பீடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்

காஞ்சி சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றுக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த புதன் கிழமை உயிரிழந்தார். அவர் உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,...

பழமுதிர் நிலையங்களில் நீரா பான விற்பனை தொடக்கம்

தமிழகம் முழுவதும் விரைவில் நீரா பான விற்பனை மேம்படுத்தப்படும் என்றும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தி பெருக்கப்படும் என்றும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் நீரா பான விற்பனையை தொடங்கிவைத்த அவர்...

தலாய்லாமா விழாவுக்கு எந்த தடையும் இல்லை: மத்திய அரசு

இந்தியாவில் தஞ்சமடைந்ததன் 60ஆம் ஆண்டை கொண்டாட புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புத்த மத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து சிலநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவுடனான...

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகள் கூடி முடிவெடுப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்

காவிரிமேலாண்மை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஓ.என்.ஜி.சி உட்பட மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அரசு ஏற்காது என்றும்...

INX மீடியா முறைகேடு வழக்கு; ப.சிதம்பரத்திடம் CBI விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் 5 நாள் காவலில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் ப.சிதம்பரத்திடமும் விரைவில் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   2007-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம்...

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியும் - நாராயணசாமியும் பூக்களை தூவி ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியும் - நாராயணசாமியும் பூக்களை தூவி ஹோலி கொண்டாடினர். அம்மாநிலத்தில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் பகுதிகளில் ஹோலி உற்சாகம் கரைபுரண்டது. புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்....

ப.சிதம்பரமும் ஊழல் செய்துள்ளதாகத் தமிழிசை குற்றச்சாட்டு

கார்த்தி மட்டுமல்ல ப.சிதம்பரமும் ஊழல் செய்துள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஐஎன்எக்ஸ் மீடியா லஞ்ச ஊழல் வழக்கில் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி கைதுசெய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். கார்த்தி...