​​
Polimer News
Polimer News Tamil.

இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் மற்றும் அனல் காற்றின் பாதிப்பால் ஐரோப்பிய மக்கள் திணறல்

இதுவரை இல்லாத அளவுக்கு ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வீசுகிறது. கடும் வெயில் மற்றும் அனல் காற்றால் அந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் திணறி வருகின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் 1977-க்குப் பின் முதன் முறையாக வெப்பம் 48 டிகிரி...

திருப்பூரில் ஆடிட்டர் வீட்டில் 33 சவரன் நகை, பணம் கொள்ளை

திருப்பூரில் ஆடிட்டர் வீட்டில் புகுந்து 33 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாண்டியன்நகரை சேர்ந்த ஜெகநாதன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பினார். கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பீரோவில் இருந்த 33 சவரன் தங்கநகை,...

நாட்டின் முக்கிய 8 நகரங்களை பெண்களுக்கு பாதுகாப்பானவையாக மேம்படுத்த திட்டம்

நாட்டின் முக்கியமான எட்டு நகரங்களையும் 2 ஆயிரத்து 919 கோடி ரூபாய் செலவில் பெண்களுக்கு பாதுகாப்பானவையாக மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என...

ஆட்டோ மொபைல் உதிரிபாகங்களுக்கான GST வரியை குறைக்க வேண்டும் : GST கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 29வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 அடுக்குகளாக உள்ள...

ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அக்கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. புதிதாக மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணிகளை முடிவு செய்யும் அதிகாரத்தை ராகுல்காந்திக்கு...

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் விராட் கோலி தமது...

ஆர்.கே.நகர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தினகரன் நிறைவேற்றவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத டி.டி.வி.தினகரனை, தொகுதி மக்கள் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.டி.வி.தினகரன் டோக்கன் செல்வன் என விமர்சித்தார்....

பீளமேடு விடுதியில் இளம் பெண்களை தவறான வழிக்கு அழைத்த வழக்கில் விடுதிக்காப்பாளர் புனிதா குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தகவல்

கோவையில் இளம் பெண்களை தவறான வழிக்கு அழைத்த வழக்கில் விடுதிக்காப்பாளர் புனிதா குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோவை பீளமேடு தர்ஷணா மகளிர் விடுதியில் இளம் பெண்களை தவறான வழிக்கு அழைத்ததாக விடுதி உரிமையாளர் ஜெகநாதன், காப்பாளர் புனிதா ஆகியோர் மீது வழக்கு...

ஹெலிகாப்டர் விபத்தில் 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சைபீரியாவில் உள்ள க்ரஸ்நோயர்ஸ்க் (Krasnoyarsk) என்ற இடத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10 மணி 20 நிமிடங்களுக்கு  MI - 8 ரக ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த...

அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்த விண்வெளிப்படை அமைக்க டிரம்ப் யோசனை

விண்வெளியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தக்கவைக்க விண்வெளிப் படை தேவை என்ற டிரம்பின் கருத்தை, தேவையில்லாத செலவினம் எனக் கூறி, பாதுகாப்புத்துறை நிராகரித்துள்ளது. விண்வெளியில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, விண்வெளிப் படை ஏற்படுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் கருத்துச் சொன்னதாக கூறப்படுகிறது....