​​
Polimer News
Polimer News Tamil.

அதிக புகையை வெளிவிடும் வாகனங்கள் பறிமுதல் செய்ய பறக்கும்படைகளை அமைக்கக்கோரி வழக்கில் கூடுதல் செயலர் ஆஜராக உத்தரவு

அதிக புகையை வெளிவிடும் வாகனங்களை பறிமுதல் செய்ய பறக்கும்படைகளை அமைக்கக்கோரிய வழக்கில் போக்குவரத்து துறைக்கான கூடுதல் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வாகனங்களை திரவ எரிபொருளிலிருந்து, வாயு எரிபொருளுக்கு மாற்றி புகையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், உச்சநீதிமன்றமும்...

மணிமுத்தாறு அணையில் இருந்து 3வது, 4வது ரீச்சுக்கு தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பில் ஈடுபட்ட வணிகர்கள்

தூத்துக்குடி மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம் பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் பகுதியில் பெய்த மழையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயப் பணிகளைத் துவக்கினர். தற்போதுவரை...

பெரியார் பல்கலைகழக இயற்பியல் துறைத் தலைவர் மீது அங்கு பணிபுரியும் மற்றொரு பேராசியர் காலணியால் அடித்ததாக புகார்

சேலம் பெரியார் பல்கலைகழக இயற்பியல் துறை தலைவரை அங்கு பணிபுரியும் மற்றொரு பேராசியர் காலணியால் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் அன்பரசன் என்பவர் குறித்து துறைத் தலைவரான குமாரதாஸிடம் மாணவர்கள் பல்வேறு புகார்களை அளித்ததாகக்...

ஆந்திரக் காவல் துறை தமிழகத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது உச்சநீதிமன்ற விதிகளை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்குள் ஆந்திரக் காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது, உச்ச நீதிமன்ற விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஆந்திரக் காவல்துறையினர் தமிழகத்தில் சட்ட விதிகளை மீறிக் கடந்த...

போரூர், மாசி மெட்ரிக்குலேஷன் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து LKG மாணவர் உயிரிழப்பு

சென்னை போரூரில் உள்ள மாசி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி. படிக்கும் மாணவர் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் மாசி மெட்ரிகுலேசன்...

விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவு

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தல் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப்பணிகள்...

காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய விசாரணைக் கைதியை விரட்டிப் பிடித்த போலீசார்

சென்னை புளியந்தோப்பு காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய விசாரணைக் கைதியை போலீசார் விரட்டிப் பிடித்தனர். நேற்றிரவு புளியந்தோப்பு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வீராசாமி என்பவரது வீட்டில் 2 செல்போன்களை திருடி தப்பியபோது பிரசன்னகுமார் என்ற இளைஞரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இரவில்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆறுவார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிப்ரவரி...

காஞ்சிபுரத்தில் துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையக் குழுக் கூட்டம்

பாதுகாப்பற்ற முறையில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் உள்ளாட்சி அதிகாரிகள் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்படுவர் எனத் தேசியத் துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையக் குழு உறுப்பினர் ஜெகதீஷ்கிரிமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தேசிய துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்...

ராமேஸ்வரத்தில் தற்காலிகமாக மின் வினியோகத்துக்கு ஏற்பாடு என அதிகாரிகள் உறுதி

ராமேஸ்வரம் அருகே உயர் அழுத்த மின் கேபிள் துண்டிக்கப்பட்டதால் 2-வது நாளாக மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் அருகே ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் ஜே.சி.பி. எந்திரத்தால் உயர் அழுத்த மின்...