​​
Polimer News
Polimer News Tamil.

சிகிச்சையின் போது குளறுபடி, மார்புப் பகுதிக்குள் ஊசி சென்றதால் கர்ப்பிணி அவதி

கும்பகோணத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகிச்சையின் போது ஏற்பட்ட குளறுபடியால் ஊசி மார்பு பகுதிக்குள் சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஞ்சனூரைச் சேர்ந்த சசிகலா என்பவருக்கு கடந்த செப்டம்பரில் காய்ச்சல் ஏற்படவே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவருக்கு ஊசி மூலம்...

புதுச்சேரியில் அரசைச் செயல்பட விடாமல் முட்டுக்கட்டை - நாராயணசாமி

புதுச்சேரியில் அரசை விரைந்து இயங்க விடாமல் பல முட்டுக்கட்டைகள் இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சன்னியாசிக் குப்பத்தில் தனியார் பங்களிப்புடன் 36 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,...

நிதி நிறுவனத்தை ஏமாற்ற லாரியை விற்றுவிட்டு, திருடு போய்விட்டதாக போலீசில் புகார் அளித்தவர் உள்பட 4 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே கடன் கொடுத்த நிதி நிறுவனத்தை ஏமாற்றுவதற்காக,லாரியை 13 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, அது காணாமல் போனதாக பொய்ப்புகார் அளித்த உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த அழகுவேல் என்ற லாரி ஓட்டுநர்,...

Facebook மூலம் பழகி சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை கொளத்தூரில் ஃபேஸ்புக் மூலம் பழகி, ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். மண்ணடியைச் சேர்ந்த முகமது அஸ்லாம் என்பவர் அப்பகுதியில் கட்டுமானத்திற்கான இரும்புப் பொருள் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் கொளத்துர்...

சீன அரசக்குடும்பம் பயன்படுத்திய பூச்சாடி ரூ.128 கோடிக்கு ஏலம்

சீன அரசக்குடும்பம் 18ஆம் நூற்றாண்டில் பயன்படுத்திய பூச்சாடி ஒன்று, பிரான்சில் 19 மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது. பிரான்சில் உள்ள ஒரு வீட்டில் அழகிய வேலைபாடுகளுடன் இருந்த பூச்சாடி ஒன்று, பழைய அட்டைப்பெட்டியில் இருந்துள்ளது. இதை பார்த்த அந்த குடும்பத்தினர், பாரீசில் உள்ள...

3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டெஸ்லா நிறுவனம் முடிவு

மின்சார கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், ஊழியர்கள் சுமார் 3500 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எழுதிய மின்னஞ்சல் கடித விவரம் ஊடகங்களில் கசிந்ததை அடுத்து, டுவிட்டரில்...

அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஆய்வகங்களை நிறுவ 3 ஆயிரம் பள்ளிகள் கூடுதலாக தேர்வு

அடல் புத்தாக்கத்திட்டத்தின் கீழ், ஆய்வகங்களை நிறுவுவதற்காக 3 ஆயிரம் பள்ளிகள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில் முனைவதற்கான ஆற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்களை நிறுவும் திட்டத்தை நிதி ஆயோக் செயல்படுத்தி வருகிறது. அடல் டிங்கரிங் லேப்ஸ் (Atal Tinkering...

வரும் கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "தேசியம் காத்த செம்மல்" என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பேசிய அவர், பாடப்புத்தகங்களில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டுமென்று அமைச்சர்கள்,...

சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தபோது, தமிழோடு விளையாடியதுபோதும் என விவாதத்தை முடித்துவைத்த சபாநாயகர்

தமிழுக்கு பெருமை சேர்த்தது யாருடைய ஆட்சி என சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தபோது, தமிழோடு விளையாடியது போதும் எனக் கூறி சபாநாயகர் தனபால் விவாதத்தை முடித்துவைத்தார். தமிழக சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கிரி, தமிழ் மொழி...

புழுதிப்புயலின் காரணமாக டெல்லியில் காற்று மாசுபாடு அளவு அதிகரிப்பு

புழுதிப்புயலின் காரணமாக டெல்லியில் காற்று மாசுபாடு அளவு தீவிரம் என்ற அளவுகோளைத் தாண்டியுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில், 10 மில்லி மீட்டருக்குக் குறைவான துகள்கள் கொண்ட பி.எம்.10 (PM 10) எனும், தூசியால் காற்றின் மாசு அளவு...