​​
Polimer News
Polimer News Tamil.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்த வாய்ப்பு என இந்திய தொழில் கூட்டமைப்பு தகவல்

பணவீக்கத்தின் உயர்வால், இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடும் என இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.. நாட்டின் பணவீக்கம், கடந்த மே மாதத்தில், 4 மாதங்களில் இல்லாத அளவாக, 4 புள்ளி 87 விழுக்காடாக அதிகரித்தது.. பழங்கள், காய்கறிகள்,...

பெருகி வரும் இறால் பண்ணைகளால் குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

ராமேஸ்வரத்தில் பெருகி வரும் இறால் பண்ணைகளால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  ராமேஸ்வரம், வடகாடு, அரியாங்குண்டு, பேக்கரும்பு உள்ளிட்ட 12 கிராமங்களில் 10 இறால் பண்ணைகள் தொடங்க மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அங்கு...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் உடல்நிலை முன்னேறி இருப்பதாகவும், அவரது சிறுநீரகங்கள் இயல்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் இதயத்...

கண்பார்வை இழந்தபோதும் தன்னம்பிக்கை இழக்காத உழைப்பாளர்

கண்பார்வை இழந்த நிலையிலும் ஊக்கத்துடன் வேளாண்மை தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்து அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் திகழ்கிறார் விவசாயி ஒருவர். அவரைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு. கரூர் மாவட்டம் நொய்யலை அடுத்த நாடார்புரத்தைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு வயது 64....

கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து திமுக விலகிவிட்டதா? சட்டப்பேரவையில் அதிமுக திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம்

கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து திமுக விலகிவிட்டதா? என சட்டப்பேரவையில் அதிமுக திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது... சட்டப்பேரவையில், மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திருப்த்தூர் திமுக எம்எல்ஏ பெரியகருப்பன், தனது உரையை தொடங்கும் முன் திமுக தலைவர் கருணாநிதியை...

வியாழன் பிற்பகலுக்குள் நேரில் முஷராப் நேரில் ஆஜராக வேண்டும் - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கெடு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பர்வேஸ் முஷாரப், கடந்த 2013 ஆம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்த போது தாம்...

வரலாற்றில் முதல் முறையாக மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி

2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன 2018-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் நாளை தொடங்குகின்றன. 2022-ஆம் ஆண்டு போட்டிகள் கத்தாரில் நடைபெறுகின்றன. இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு போட்டிகளை...

புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகள் இடையே மோதல் - போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இருவர் படுகாயம்

புழல் மத்திய சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கைதிகள் இருவர் காயம் அடைந்தனர். உளவு பார்த்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டைச் சேர்ந்த மஹிர் டெர்விம் என்ற கைதிக்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ...

சிகிச்சையின் போது குளறுபடி, மார்புப் பகுதிக்குள் ஊசி சென்றதால் கர்ப்பிணி அவதி

கும்பகோணத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகிச்சையின் போது ஏற்பட்ட குளறுபடியால் ஊசி மார்பு பகுதிக்குள் சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஞ்சனூரைச் சேர்ந்த சசிகலா என்பவருக்கு கடந்த செப்டம்பரில் காய்ச்சல் ஏற்படவே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவருக்கு ஊசி மூலம்...

புதுச்சேரியில் அரசைச் செயல்பட விடாமல் முட்டுக்கட்டை - நாராயணசாமி

புதுச்சேரியில் அரசை விரைந்து இயங்க விடாமல் பல முட்டுக்கட்டைகள் இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சன்னியாசிக் குப்பத்தில் தனியார் பங்களிப்புடன் 36 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,...