​​
Polimer News
Polimer News Tamil.

15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

திருப்பூரில் சாலையில் செல்லும் போதெல்லாம் குரைத்ததால் 15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டதாக மீன் வியாபாரி ஒருவர் மீது அப்பகுதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருப்பூர் கொங்கணகிரி 2ம் வீதியை சேர்ந்த கோபால் என்பவர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

பெரு நாட்டில் கோமாளிகள் தின விழா கோலாகலமாக கொண்டாட்டம்

பெரு நாட்டின் தலைநகரான லீமாவில் கோமாளிகள் தின விழா நகைச்சுவையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வண்ணங்களில் உடையணிந்து வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் முகத்தில் சாயம் பூசிக்கொண்டு தலையில் கோமாளித் தனமான விக்கை போட்டு கொண்டும் நகர்வலத்தில் உலா வந்தனர். முகத்தை பல்வேறு கோணங்களில் சுழித்து, நெழித்து...

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பெரு நாட்டில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள யுரிமாகுவாஸ் (Yurimaguas) எனும் நகரிலிருந்து 158 கி.மீ தூரத்திலுள்ள வடக்கு- வடகிழக்கு பகுதியில்...

யானையை விரட்டக்கோரி வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடியிருப்புப் பகுதியில் அச்சுறுத்தி வரும் யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நவமலைப் பகுதி ஆற்றங்கரை ஓரமாக 40க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் கடந்த பல...

வீடு தேடி வரும் ஜாஸ்பர் ரோபோ

பொருட்களை சுமந்து சென்று விநியோகம் செய்யும் எந்திர மனிதனை, சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்து சாதனை புரிந்துள்ளனர். மனிதகுல வாழ்வில் தொழில்நுட்பம் பல்வேறு விந்தைகளை நிகழ்த்தி வருகிறது. முன்பெல்லாம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கடை, கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தோம். ஆனால்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்

நாமக்கல் : நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார். பழையபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1985ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் 34 ஆண்டுகள் கழித்து...

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வசந்தகுமார்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை நாளை சந்தித்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கவுள்ளதாக வசந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், சட்டமன்ற...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பதிவு...

தமிழகத்திலுள்ள சுற்றுலாதளங்களில் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளையொட்டி தமிழகத்திலுள்ள சுற்றுலாதளங்களில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஒக்கேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கலில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள், அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேலும் தொங்குபாலம், முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம்...

தெலங்கானாவில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெலங்கானாவில் கடந்த ஒரு மாதகாலமாக வெயில் கொளுத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை இருந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு...