​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லண்டனில் வண்ணத்துப்பூச்சி அருங்காட்சியகத்தை காணக்குவியும் மக்கள்

லண்டனில் வண்ணத்துப்பூச்சி அருங்காட்சியகத்தை காணக்குவியும் மக்கள்

லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வண்ணத்துப் பூச்சிகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 60 வகையான வண்ணத்து பூச்சியினங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. வண்ணச் சிறகுகளை அசைத்துப் பறக்கும் இந்த பூச்சிகளைக் காண ஏராளமான பொதுமக்கள் அருங்காட்சியகத்திற்கு...

தமிழகம் முழுவதும் கால்நடை சிகிச்சைக்காக அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் - உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மாவட்டம் தோறும் கால்நடை மருத்துவத்துக்கென அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் வைஃபை...

மகாராஷ்ட்ராவில் சூடு பிடிக்கும் தேநீர் விவகாரம்

மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தில் ஒரு நாளைக்குச் சராசரியாகப் பதினெட்டாயிரத்து ஐந்நூறு கோப்பைத் தேநீர் பரிமாறப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தில் தேநீருக்காகச் செலவிடப்பட்ட தொகை 2015-2016ஆம் ஆண்டில் 58லட்ச ரூபாயாக இருந்தது. 2017-2018ஆம் ஆண்டில் 3கோடியே 40லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தத்...

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முதலமைச்சர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்...

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது GSLV ராக்கெட்

தகவல் தொடர்புக்கான ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி.-எஃப்08 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்பட உள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்புக்கான ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. இதனை ஜிஎஸ்எல்.வி எஃப்08 ராக்கெட் மூலம் அனுப்புவதற்கான 27 மணி நேர கவுன்ட்-டவுன்...

பழனி மலை உற்சவர் சிலை மோசடி - இணை ஆணையரிடம் விசாரணை

பழனி மலை முருகன் கோவிலின், உற்சவர் சிலையை முறைகேடாக செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்குத் தொடர்பாக, கோவில் இணை ஆணையரிடம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்... உற்சவர் சிலை செய்யப்பட்ட ஆண்டில் பணியிலிருந்த ஊழியர்கள், அதிகாரிகளிடம் நடைபெறும்...

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அணு ஆயுதங்களை கைவிடுவார் - டிரம்ப் நம்பிக்கை

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அணு ஆயுதங்களை கைவிடுவார் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்பட சிறு வாய்ப்பு கூட இல்லை என...

காஷ்மீர் வனப்பகுதியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்பு படையினரின் அதிரடி தேடுதல் வேட்டையில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ராஜோவ்ரி (Rajouri ) மாவட்டத்தின் பீர் பான்சாலில் ((Pir Panchal)) உள்ள வனப்பகுதியில், தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்....

வெடிகுண்டு மிரட்டலால் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது ஏர் இந்தியா விமானம்

வெடிகுண்டு மிரட்டலால் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் டெல்லிக்கே திருப்பப்பட்டது. டெல்லியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டது. AI-020 என்ற அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின்...

திருச்சி அருகே ராட்சத சாதனத்துடன் விபத்துக்குள்ளான லாரி - கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்சி அருகே ராட்சத மின் உற்பத்தி சாதனம் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரான 30 டன் எடை கொண்ட ராட்சத சாதனம், வங்கதேசத்தில் உள்ள இந்தியா -...