​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அறந்தாங்கி அருகே வடமாடு பிடிக்க வந்த வீரரை முட்டித் தூக்கி பந்தாடிய காளை

அறந்தாங்கி அருகே வடமாடு பிடிக்க வந்த வீரரை முட்டித் தூக்கி பந்தாடிய காளை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வடமாடு பிடிக்கும் போட்டிகள் நடைபெற்றன. முதலில் ஆலமரத்து முனிக்கோயில் மாடும், அதனை தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம்,மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 12 மாடுகளும் களம் இறங்கின. மைதானத்தின் நடுவில் கயிறால் மாடுகளை கட்டி அதை வீரர்கள் அடக்கினர். அப்போது...

அமெரிக்க விமானப்படைக்கு உளவு செயற்கைக் கோள் ஏவப்பட்டது

அமெரிக்க விமானப்படைக்கான உளவு செயற்கைக் கோளை அந்நாடு வெற்றிகரமாக ஏவியுள்ளது. NROL-71 என்று பெயரிடப்பட்ட அந்த செயற்கைக் கோள் பெரிய ராக்கெட்டான டெல்டா 4 ((Delta 4)) மூலம் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. செலுத்திய சில நிமிடங்களில்...

இமாச்சலப் பிரதேசத்தில் பொதுப்பிரிவினருக்கான 10 சத இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது

இமாச்சலப் பிரதேசத்தில் பொதுப்பிரிவினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே குஜராத், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பொதுப்பிரிவினருக்கான பத்து சத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை...

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை

தைப்பூசத்தை  முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.  இந்த ஆண்டுக்கான தைப்பூசம் திருவிழாவானது நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம், சாயல்குடி,   திருநெல்வேலி, மதுரை,  விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு...

தினகரனை நம்பிச் சென்றவர்களே அவருக்கு பாடம் புகட்டுவார்கள் - இரா.துரைக்கண்ணு

தினகரனை நம்பிச் சென்றவர்களே அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். ...

பர்கர் வாங்குவதற்கு வரிசையில் நின்றார் பில்கேட்ஸ்

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பர்கர் வாங்குவதற்காக ஹோட்டல் முன் வரிசையில் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் டிக்ஸ் டிரைவ் இன் என்ற சிறிய ஹோட்டலுக்கு அவர் சென்றபோது அங்கு ஏற்கனவே சிலர்...

காற்றின் வேகத்தில் படகைச் செலுத்தி பள்ளி செல்லும் சிறுவன்

தாய்லாந்து நாட்டில் 5 வயது சிறுவன் தானாகவே படகில் பள்ளிக்குச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. பாங்காக்கின் புறநகர் பகுதியான சமுத் பிரகான் என்ற இடத்தில் கடந்த 200 ஆண்டுகளாக நீர்வழிப் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தானாதெட் பெட்னோய் என்ற...

ரபேல் விமானங்களுக்காக ரூ 34,000 கோடி பணம் செலுத்தப்பட்டது

கடுமையான சர்ச்சைகளுக்கு ஆளான ரபேல் விமானங்களுக்கான தொகையில் பாதியளவு செலுத்தப்பட்டு விட்டது என்றும், வரும் அக்டோபர் மாதம் முதல் நான்கு விமானங்கள்  இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும்  பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக...

நான்கு கன்னியாஸ்திரீகள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்கும்படியும் கேரள முதல்வருக்கு கடிதம்

கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நான்கு கன்னியாஸ்திரீகள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்பு அளிக்கும்படியும் கோரியுள்ளனர். பாலியல் புகாருக்கு ஆளான ஜலந்தர் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரீகளை இடமாற்றம் செய்து, கோட்டயம் கான்வென்ட் பள்ளியை விட்டு வெளியேறும்படி ரோமன்...

பூ என்ற பொமரேனியன் வகை நாய் உயிரிழப்பு

உலகின் அழகானது என்ற பெயரைப் பெற்ற பூ என்ற பொமரேனியன் நாய் தனது 12வது வயதில் உயிரிழந்தது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பூவின் பெயரால் தொடங்கப்பட்ட சமூக வலைத்தளம் ஒன்றில் அதனை 17 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அதன் வலைதளத்தில் பூவின் தினசரி...